காதலியிடம் இருந்து மகனை, மீட்க முயன்ற தந்தை கைது
குறித்த நபர் நேற்று (22) பிற்பகல் கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 5000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் மகன், கலேவெல பிரதேசத்தில் உள்ள காதலியின் வீட்டில் உள்ள நிலையில். தனது மகனை மீட்டு தம்மிடம் ஒப்படைக்குமாறு கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் விபுல பண்டாரவிடம் கோரியுள்ளார்.
பின்னர் கலேவெல பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியை அழைத்து முறைப்பாட்டைப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.
அப்போது, பொறுப்பதிகாரி பொலிஸ் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, சந்தேக நபர், வாசித்து கொண்டிருந்த புத்தகத்தில் அட்டை ஒன்றை வைத்துள்ளார்.
பின்னர் அதனை திறந்து பார்த்த போது 5000 ரூபா நாணயத்தாள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த பொறுப்பதிகாரி அந்த நபரிடம் இந்த பணம் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் அவர் தனது தேவையை பூர்த்தி செய்ய மகிழ்ச்சியான தொகையாக கொடுக்க முயன்றதாக கூறினார்.
அப்போது, கலேவெல பொலிஸ் பொறுப்பதிகாரி, குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை அழைத்து, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் இலஞ்சம் கொடுக்க முயன்றமை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கலேவெல பொலிஸ் குற்றப்பிரிவு, அவர் தொடர்பில் இன்று (23) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment