நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற, உண்மையான ஆர்வம் ஜனாதிபதிக்கு இருந்தால்...?
இன்றைய (30) ஊடக சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள்
*13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஜனாதிபதியினால் அண்மையில் கூட்டப்பட்ட சர்வ கட்சி மாநாடு தொடர்பாகவும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் கடந்த 2023.07.15 ஆந் திகதி அன்று ஜனாதிபதி செயலகத்தில் தகவல்கள் கோரப்பட்டன.குறித்த தகவல் கோரலுக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பு வைத்துள்ள தகவல்களை வெளிப்படுத்தியதோடு,
*21 ஆவது திருத்தம் ஊடக சுயாதீன மனித உரிமை ஆணைக்கு நியமிக்கப்பட்டது.
என்றாலும் தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி சகல துறைகளிலும் தலையீடு செய்கிறார்.கைது செய்யப்படுபவர்களை நியாயப்படுத்த கோவை ஒன்றை தயாரிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குகிறார்.இவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களில் தலையிட முடியுமா? என்றவாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் தலையீடு தொடர்பாகவும்,
*பிரான்ஸ் ஜனாதிபதி வருகை தந்த நாள் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாகவும்,
*நாட்டை கட்டியெழுப்ப உண்மையான விருப்பம் ஜனாதிபதிக்கு இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைத்து புதிய மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும் என்றவாறும் கருத்துரைத்தார்.
Post a Comment