அவதிப்படும் மஹிந்த - சந்திப்புக்களிலும் வீழ்ச்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பெரும்பாலும் ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் எனவும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழங்கால் மற்றும் முதுகுவலி காரணமாக, அவரை அதிக ஓய்வு எடுக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தினமும் பெருமளவிலான மக்கள் வந்தாலும், தற்போது அவரைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய அரசியல் கூட்டங்கள் எதுவும் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கள்ளன் செத்துத் தொலைந்தால் மொட்டுக்களின் தொந்தரவும் அட்டகாசமும் கொஞ்சம் குறைய வாய்ப்புகள் உள்ளன.
ReplyDelete