கோர விபத்து - ஒருவர் பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட மூவர் படுகாயம்
பதுளை - பண்டாரவளை வீதியில் இன்று -02- இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் பயணித்த குடும்பம் ஒன்றே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதி அருகில் இருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் எல்ல பகுதியைச் சேர்ந்த 51 வயதான வாகன சாரதியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment