யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன்
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ
யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே!
என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.
யா அல்லாஹ்!
என்னுடய காரியங்களை இலேசாக ஆக்க உன்னிடம் கேட்கிறேன்
என் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த உன்னிடம்ஸ இறைஞ்சுகிறேன்.
என் மனதில் அமைதியை ஏற்படுத்த உன்னிடம் பிரார்திக்கின்றேன்
என் சிந்தனைகள் ஓர்மையடைய உன்னிடம் மன்றாடுகிறேன்
என் வாழ்க்கை என்றும் நல்வாய்ப்புகளைப் பெற்றதாக திகழ உன்னிடம் கெஞ்சுகிறேன்.
என்னுடைய அனைத்து சகோதரர்களுக்கும் நான் உன்னிடம் கேட்கும் அனைத்து நற் பேறுகளையும் வழங்க மனமுருகிக் கேட்கிறேன்
رَبي أنت المُيسر وَأنت المُسَهل ، سَهل أمري وَحقَق مَطلبي ، وَسَخر لِي مَا هُوَ خَيرٌ لِي
என் ரப்பே!
நீ தான் சிரமங்களை லேசாக்குபவன்,
நீ தான் காரியங்களை இலகுவாக்குபவன்.
என்னுடைய காரியங்களை இலேசாக்குவாயாக!
என்னுடைய நோக்கங்களை உறுதியாக்குவாயாக!
எனக்கு எவை நன்மைபயக்குமோ
அவற்றை எனக்கு வசப்படுத்திக் கொடுப்பாயாக!
ஆமீன்.
Post a Comment