பயங்கரவாத பட்டியலில் அஹ்னாப் ஜசிம்
- Tamilwin -
அஹ்னாப் என தமிழ் வாசக சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞரும், ஆசிரியருமான அஹ்னாப் ஜசிம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபராக இலங்கை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.
2023 ஜூன் 8 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
"அவ்வப்போது திருத்தப்பட்டு ஆகஸ்ட் 1, 2022 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2291/02 இல் வெளியிடப்பட்ட, 21 மார்ச் 2014 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 1854/41இல் வெளியிடப்பட்ட நபர்கள் பட்டியலில் இறுதியாக திருத்தங்கள் செய்யப்பட்ட, குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலின் உப அட்டவணையை நீக்கி பின்வரும் அட்டவணைகளை மாற்றுவதன் மூலம் மேலும் திருத்தப்பட்டுள்ளது.” என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு அதில் அஹ்னாப் ஜசீமின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கையின் அதிகார வர்க்கத்தினருக்கும் புன்னியம் கிடைக்கும் வகையில், அஹ்னாப் ஜசீம் தற்போது தொழிலின்றி விவசாயம் செய்து வருவதாக மன்னாரமுது அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்சய் வில்சன் குணசேகர டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளார்.
Post a Comment