சொய்ஸாபுர குடியிருப்பில் படுகொலைச் சம்பவம்
தபேலா வாசிக்கும் தொழில் ஈடுபடும் பிரேமரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வரும் குறித்த நபர், களனி பிரதேசத்தில் இருந்து வந்தவரால் இந்தக் கொலையை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 68 வயதுடையவராகும். உயிரிழந்த நபர் நேற்று வேறொரு உறவினருடன் இந்த வீட்டில் இருந்ததாகவும், வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதும் உறவினர் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்ததாகவும் அடுக்குமாடி குடியிருப்பில் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment