எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்
- திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது -
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினமும், நேற்றும் பெங்களூருவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு INDIA (Indian National Developmental Inclusive Alliance) எனப் பெயர் சூட்டப்பட்டது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ள மகாராஷ்டிர பாஜக தலைவர் ஆசுதோஷ் துபே, "எதிர்க்கட்சிகள் தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டி இருப்பது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இது அவமரியாதை" என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment