Header Ads



அமைச்சரை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.


இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.


பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

1 comment:

  1. நாடு முழுவதிலுமுள்ள அத்தனை அரச வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகள், மருத்துவ , நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் சத்தியக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து அதில் நேர்மையான சுகாதார அமைச்சு அதிகாரிகளும் இணைந்து கொண்டால் அந்த சைத்தான் அமைச்சிலிருந்து ஓடிவிடுவான். அப்போது அனைவரும் சேர்ந்து அவனை சிறையில் அடைக்கலாம், அல்லது அவனுக்கு அவசியமான மருந்தைக் கொடுக்கலாம். அதுதவிர அவனை பதிவிலிருந்து வௌியேற்ற வேறு உத்திகள் எமக்குத் தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.