இந்திய சமையல் நிபுணர், கொழும்பில் அடித்துக் கொலை
கொழும்பு கோட்டை, காலி முகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் இந்திய நாட்டை சேர்ந்த முகாமையாளர் ஒருவர் இந்திய பிரஜையான தலைமை சமையல் கலை நிபுணரை கொலை செய்துள்ளதாக கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) இரவு கத்தியால் குத்தியதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அஜய் குமார் என்ற 29 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் முகாமையாளர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவகத்தில் சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment