மகிந்தவிற்கு அதிகாரத்தை வழங்க காத்திருக்கும் மக்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை சேர்ந்த ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றில் கூடிய அதிகாரத்தை கொண்ட கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமையில் நாட்டின் அதிகாரத்தை விரைவில் கைப்பற்றிக்கொள்வதாகவும் மகிந்தவிற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர் என சாகர தெரிவித்துள்ளார்.
குடிகார மட்டையான இந்த சாக்கடையின் படத்தைப் பார்க்கும் போது ஆம் இந்த நாட்டின் பொதுமக்கள் கவசம்பத்துக்களாக இருக்கும் காலமெல்லாம் பலமுறை ஏமாற்றி வாக்குகளைப் பெறமுடியும். அவற்றைப் பெற்று மீண்டும் எஞ்சியிருக்கும் EPF, ETF கோடான கோடி பணத்தைச் சுருட்டிக் கொண்டு எங்காவது ஓடி ஒழிப்பான்கள். அதற்கு இந்த கவசம்பத் கள்ள மஹிந்தா கூட்டத்துக்கு களமமைத்துக் கொடுக்கும்.
ReplyDelete