Header Ads



கொழும்பு சாஹிராவுடன் மோதி, கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய சம்பியனாகியது


-  ஹஸ்பர் -


கொழும்பு குதிரை பந்தைய மைதானத்தில் இன்று (30) நடைபெற்ற கொழும்பு சாஹிரா கல்லூரியுடனான உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 1-0 என்ற ரீதியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி  வெற்றி பெற்று தேசிய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

  14 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சமபோஷ சம்பியன் கிண்ண  அகில இலங்கை உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியை வீழ்த்தி கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் வெற்றிவாகை சூடி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.


இந்த தொடரை கிண்ணியா மத்திய கல்லூரி அணி  தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றிகொண்டுள்ளது  சிறப்பம்சமாகும்.

No comments

Powered by Blogger.