பிக்கு பற்றிய பிரச்சினை தனியானது, பெண்களை நிர்வாணமாக்கி தாக்கியது வெறுக்கத்தக்கது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, பிக்கு ஒருவருடன் இருந்த இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அதை காணொளியில் பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த மதகுருவின் ஒழுங்கு பற்றிய பிரச்சினைகளை தனித்தனியாகக் கையாளலாம். ஆனால், பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய விதம் மிகவும் வெறுக்கத்தக்கது. அதைச் செய்ய எந்த நபருக்கும் உரிமை இல்லை," என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளுக்கெதிராக விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment