Header Ads



தனக்குத் தானே இறுதி அஞ்சலி - மக்கள் உணர்ச்சிப்பொங்க கவலை


உலகிலேயே மிகப் பழமையான செய்தித்தாள் என்ற பெருமையைப் பெற்ற Wiener Zeitung தனது வெயியீட்டை நிறுத்திக்கொண்டது. 


ஆஸ்திரியாவின் வியன்னாவை தளமாகக் கொண்டு இயங்கிய Wiener Zeitung, நேற்று (30) தனது இறுதி செய்தித்தாளை வௌியிட்டது.  


கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த, அரசுக்கு சொந்தமான Wiener Zeitung செய்தித்தாள் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 


Wiener Zeitung வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது செய்தித்தாளின் முகப்புப் பக்கத்தில், 116,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என அச்சிட்டு,  தனது செய்தித்தாளுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்திக்கொண்டது.


Wiener Zeitung முகப்புப் பக்கம், டிவிட்டர் பக்கத்தில் தனது இறுதி செய்தித்தாளை  பகிர்ந்திருந்தது. 


இதற்கு வியன்னாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். 


பலரும் இந்த செய்தித்தாளை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளப்போவதாக உணர்ச்சிபொங்க பதிவிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.