பெருநாள் உரை நிகழ்த்திவிட்டு வரும்போது பாம்பு தீண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் வபாத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் கானத்தூர் சலீம் MISC அவர்கள், 29.06.23 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெருநாள் உரை நிகழ்த்திவிட்டு இல்லத்துக்கு திரும்பி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு சகோதரர் சலீம் அவர்களின் வலது கையில் கொட்டியது.
உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி 30.6.2023 மாலை 5மணியளவில் வஃபாத் ஆனார்கள்
45 வயதுக்கு மேல் மார்க்கக் கல்வி கற்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இஸ்லாமியக் கல்லூரியில் தனது நான்காண்டு படிப்பை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற சகோதரர்.
மார்க்கப் பணியில்
அழைப்புப்பணியில்
ஆர்வம் கொண்டவர்.
அன்பு மிக்கவர்.
அவரது மறுமை மற்றும் மண்ணறை வாழ்க்கைக்காகவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின் அமைதிக்காகவும்
அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
* கட்டு வரையான் - Common krait
கட்டு வரையான் அல்லது கட்டுவிரியன் இது விரியன் வகை பாம்பு கிடையாது. ஏனினும் மிக கொடிய விஷமுடையவை.
இந்த பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தை தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது.
தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும்.
சிகிச்சை எடுக்க தவறினால் பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 1 மணி நேரத்திற்குள் சாவு ஏற்படலாம்.
மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
Post a Comment