சவூதிக்காரரின் விசித்திரமான பெருநாள் பரிசு
கொண்டாட்டங்களுடன் கருணை மற்றும் சமூக தொண்டு பணிகள் செய்வது அரபிகளின் வழக்கம்.
ஆட்சியாளர்கள் முதல் சாதாரண பாமரர்களும் கூட இதுபோன்ற நல்ல பணிகள் செய்வதில் போட்டி போடுவார்கள்.
அதுப்போன்ற ஒரு செய்திதான் சவூதியிலிருந்து வெளிவந்து இருக்கிறது.
தன்னோடு ஸ்திரமாக கொடுக்கல் வாங்கல் செய்து வருகின்றவர்களுக்கு பெருநாள் பரிசாக ஸாலிம் பின் ஃபத்ஹான் அல் ராஷிதி என்ற சவூதி வியாபாரி வழங்கியதை கேட்டால் நாம் நடுங்குவோம்.
அவருக்கு கடைக்காரர்கள் கொடுக்க வேண்டிய கடன்கள் எழுதி வைத்து இருந்த பற்று புத்தகத்தை எரித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
இவர் கடன் புத்தகத்தை எரிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக கமெண்டுகளும்,ஷேரும் நிறைந்தது.
இந்த மகத்தான மாதத்தின் புண்ணிய தினத்தில் நான் எல்லா நபர்களையும் சும்மா விடுகிறேன்.
பின்னர் தனக்கு பணம் தர வேண்டியவர்களின் பெயர்கள் அடையாளப்படுத்தி இருந்த பற்று புத்தகத்தை எரித்தார்.
சிராஜுத்தீன் அஹ்ஸனி
Post a Comment