கொலையா..? தற்கொலையா..?? குழம்பிப் போயுள்ள பொலிஸார்
நேற்று முன்தினம் இரவு (16) யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்தே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இரவு இருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர்களின் ஏழு வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இளம் தாய் உயிர்ழந்தமை தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment