பள்ளிவாசல் ஒன்றை அமைக்க உதவுங்கள், இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம்களின் உருக்கமான வேண்டுகோள்
குறித்த இந் நிகழ்விற்கு எமது விஷேட அழைப்பை ஏற்று இத்தாலி மிளானோ வில் அமைந்துள்ள இத்தாலிக்கான இலங்கை துணை தூதுவராலய அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை ஒரு விஷேட அம்சமாகும் .
பகல் போஷனத்தை தொடர்ந்து சுமார் 16.30 மணி அளவில் எமது ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றன அல்ஹம்துலில்லாஹ்.
இது போன்ற எமது ஒன்று கூடல் நிகழ்வுகள் மற்றும் பல மார்க்க நிகழ்ச்சிகளை இதுவரை காலமும் எமது இதர சகோதரர்களின் பள்ளிவாயல்களில் அல்லது மண்டபங்களில் தான் (அவர்களின் அனுமதி பெறப்பட்டு) SLMC ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது. எமக்கான பள்ளிவாயல் அல்லது ஒரு மண்டபம் இதுவரை காலமும் இல்லாமையினால் ஒவ்வொரு முறையும் மேற்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் SLMC தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது!
எனவே புதிதாக தெரிவு செய்யப்பட்ட SLMC நிர்வாகம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் எமக்கான சகல வசதிகளுடன் கூடிய ஒரு பள்ளிவாயலை உருவாக்க வேண்டும் என்ற பிராதன குறிக்கோளுடன் அதற்கான பணிகளில் தீவிரமாய் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
மிகச் சிறிய சமூகமாக இந்த இத்தாலிய தேசத்திலும் எமது சந்ததியினரை மார்க்க வரையறைகளுடன் வழிநடத்த எமக்கென அமைய இருக்கும் மஸ்ஜித் என்ற அமைப்பே சிறந்த அஸ்திவாரமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.
இப்பதிவை வாசிக்கும் நீங்களும் இப் பாரிய பணிக்கு பங்களிக்க விரும்பினால் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது மேலான ஒத்துழைப்பை தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்!
பார்ப்பதற்கு அருமையாக இருக்கின்றது.இது போன்ற நிகழ்வுகளை நடாத்துவது குடும்பங்களுக்கிடையே பரஸ்பர நல்லுறவை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன் பிள்ளைகளுக்கு மார்க்க விடயங்களை படிப்படியாக கற்றுக் கொடுக்கவும் வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம். குறிப்பாக அந்த ஊரில் பள்ளிவாயல் அல்லது கலாசார மண்டபத்தை அமைக்க வௌியிலிருந்து பணஉதவி கேட்கும் பெரும்பாலான இலங்கைச் சோனகர்களின் பழக்கத்தை முற்றாகக் கைவிட்டு உங்கள் சொந்த பணத்தைக் கொண்டு இதனை துய்மையாக அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் ஒரு பள்ளிவாயலை அமைக்கும் உன்னத திட்டத்தை ஆரம்பியுங்கள். அங்கு 200 குடும்பங்கள் ஒன்று சேர்ந்திருந்தால் நிச்சியம் அவர்களில் ஒருவருக்கு 1000 டொலர் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது அவ்வளவு பெரிய காரியமல்ல. இரண்டு இலட்சம் டொலர்களைக் கொண்டு இந்த உன்னத பணியை ஆரம்பியுங்கள். தேவையான பணத்தை அல்லாஹ் தருவான். தயவுசெய்து பள்ளிவாயல் கட்டுவதற்கு யாரிடமும் உதவி கேட்க வேண்டாம். நீங்களாக உங்கள் பணத்தைச் சேர்த்து நீங்கள் ஆரம்பம் செய்யுங்கள். தேவையான பணத்தையும் பொருட்களையும் ஒன்றுசேர்க்க அல்லாஹ் போதுமானவன். ஆனால் இந்த துய்மையான பணியில் பல இட்டுக்கட்டைகள், தடைகள், சிரமங்கள் வரலாம்.அவற்றை அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருந்து உங்கள் பணியை முன்னெடுங்கள். அது தவிர சர்வதேச புகழ்பெற்ற பிச்சைக்காரர் என்ற இலங்கையின் ஆட்சியாளர்கள் நாட்டுக்குக் கொண்டு சேர்த்த பெயரை நீங்களும் இணைத்துக் கொள்ளாதீர்கள். கௌரவமாக தலைநிமிர்ந்து பிச்சை கேட்காது நேர்மையாக வாழப்பழகுங்கள். பள்ளி கட்ட பணம் சேர்ப்பதும் பிச்சை கேட்பதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு சேர்ந்த பணத்தில் நிச்சியம் ஊழல், களவு நடக்கும். அதனால் சமூகத்தில் எஞ்சிய உறவுகளும் கெட்டுப் போகும். அதற்குப் பகரமாக நீங்கள் துய்மையாக உங்கள் பணத்தைச் சேர்த்து அந்த பணியை மேற்கொண்டால் அங்கு அல்லாஹ்வின் உதவியும் பரக்கத்தும் நிச்சியம் கிடைக்கும். அப்போது நீங்கள் நினையாக திசையிலிருந்து உதவி செய்ய அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete