பாலத்தில் வீழ்ந்த பஸ்ஸில் பயணித்து, மரணித்த மூவரின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள கொட்டலி ஆற்றுப் பாலத்தின் ஆற்றுக்குள் வீழ்ந்து மரணித்த மூவரின் ஜனாஸா நல்லடக்கம் 11ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஏறாவூர் காட்டுப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி இரவு பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர். அவர்களில் ஓரு பெண்ணும் இரு ஆண்களுமாக மூவர் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள்.
பொலொன்னறுவை மாவட்டம் - கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட அந்த பேரூந்து, மன்னம்பிட்டி 'கொட்டலி' பாலத்திலிருந்து விலகி ஆற்றில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. பஸ் விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணமென்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post a Comment