Header Ads



கிழக்கில் இருந்து, தெற்கு வந்துள்ள "லோடியா"


கிழக்கு கடற்கரையில் இருந்த 'லோடியா' என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.


இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மீன் இனத்தை கடலில் காணமுடியும் என கலாநிதி ரவி ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.


இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீலமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.


இந்த மீனை தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் என்பது மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments

Powered by Blogger.