பிரான்ஸ் சம்பவத்திற்கு ஆதரவாக சுவிஸில் களமிறங்கிய இளைஞர்கள், உடனடியாக கட்டுப்படுத்திய பொலிசார்
சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் பிரான்ஸ் பாணி கலவரத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, கடைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு ஞாயிறன்று தெரிவித்துள்ளது.
ஆனால், கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல், தெருவில் இறங்கிய இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதுடன், ஜன்னல்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கைதான 6 இளைஞர்களுடன் வயதான ஒரு நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பிரான்சில் ஐந்தாவது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
17 வயது நஹெல் என்ற இளைஞர் பொலிஸ் வன்முறைக்கு பலியான நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய பல நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனிடையே, இளைஞர் நஹெலின் சடலம் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்ட நிலையில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்சில் பற்றியெரியும் கலவரங்களின் எதிரொலியாக, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய லொசானில் கூடி வணிகங்களை சேதப்படுத்தினர் என நகர பொலிசார் தெரியப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் திரண்ட இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து சுமார் 50 பொலிசார் களமிறக்கப்பட்டு, கலவரத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் 15- 16 வயதுடைய மூன்று பெண்கள் எனவும், போஸ்னியா, போர்த்துகல் மற்றும் சோமாலியா நாட்டவர்கள் இவர்கள் எனவும், கைதான மூன்று சிறுவர்களில் ஒருவர் சுவிஸ் குடிமகன் எனவும் எஞ்சிய இருவர் ஜார்ஜியா மற்றும் செர்பியா நாட்டவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment