8 நாடுகளை தோற்கடித்து பதக்கங்களை வென்ற இலங்கை மாணவி
சிங்கப்பூரில் எட்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் - 2023 போட்டியில் இலங்கை வீராங்களை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.
கம்பஹா, மிரிஸ்வத்த, கெப்பிட்டிபொல உயர்தரப் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் ஷெனுஷி தமாஷா என்ற மாணவியே இவ்வாறு 15 வயதுக்குட்பட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தையும் மற்றுமொரு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இந்த மாணவி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பயிற்சியாளர் தனுகா பியூமல் வழிக்காட்டலில் இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இம்மாணவி இலங்கைக்கு மட்டுமின்றி கெப்பிட்டிபொல கல்லூரிக்கும் பெறுமையை பெற்றுத்தந்தமைக்காக கல்லூரியின் அதிபர் சாந்தி விஜேசூரிய தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
தரம் 10 இல் கல்வி கற்கும் ஷெனுஷி தமாஷா என்ற மாணவிக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள். இது ஒரு சாதாரண சாதனையல்ல. 15 வயதுக்குக்கீழ்ப்பட்ட ஒரு மாணவி சர்வதேச நாடுகளுடன் போட்டியிட்டு 8 நாடுகளை வெற்றி கொள்வது என்பது மிகப் பெரும் சவாலான ஒரு போட்டியாகும். இந்த சின்ன வயதில் துணிச்சலுடனும் தைரியத்துடனும் போட்டியிட்டு அந்த சிறுமிக்கும் நாட்டுக்கும் புகழைக் கொண்டு வந்த இது போன்ற பிள்ளைகளை விளையாட்டு அமைச்சும் அரசாங்கமும் ஊக்குவிக்க வேண்டும். அப்போது திறமையுள்ள ஏனைய மாணவர்களும் இதில் கலந்து கொண்டு அவர்களின் உடலாரோக்கியத்தைப் பேணுவதுடன் நாட்டுக்கும் பெருமையைக் கொண்டு வரமுடியும். இந்த மாணவர்கள் போன்ற ஏனையவர்களையும் ஊக்குவிக்க ஒரு நிதியை உடனடியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் சொந்த நலனுக்கும் குடும்பத்தை ஆதரிக்கவும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அரசாங்கம் அல்லது தனியார் இந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ReplyDelete