Header Ads



7 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - தந்தையும், மாமாவும் கைது


- கனகராசா சரவணன் -


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார்  ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த சிறுமியை, 49 வயதுடைய தந்தையும்  52 வயதுடைய சிறுமியின் மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொண்டுவந்துள்ள நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை  இருவரையும் கைது செய்தனர்.


இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையம் எதிர்வரும் 27 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார். 

No comments

Powered by Blogger.