Header Ads



5 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் - வர்த்தமானியும் வெளியானது


எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் இஸாக் ரஹ்மான் Mp ஆகியோரின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினருடானான தொடர்  முயற்சியின் பயனாக தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

 

இந்த அமைப்புகள் மீது போடப்பட்ட தடை அரசினால் உத்தியோகபூர்வமாக இன்று (27.07.2023ம் திகதி) வர்த்தமானி எண் 2223/3மூலம் நீக்கப்பட்டு விட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 


2223/3  வர்த்தமானியின் உப அட்டவணையில் குறிப்பிடப்படப்பட்டிருந்த  ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத் அன்ஸாரி சுன்னதில் முஹம்மதிய்யா  ஆகிய அமைப்புகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.