54 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா பிடிபட்டது
யாழ்ப்பாணம் வெத்தலகேணி வத்திராயன் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது டிங்கி படகு ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 165 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சுமார் 165 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா அடைக்கப்பட்டிருந்த 75 பொதிகளை டிங்கி படகில் இருந்து கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய முள்ளியனைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் மற்றும் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதாகவும், அதன் கடற்பரப்பு மற்றும் கரையோர வலயங்களில் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment