Header Ads



500 ஆசிரியர்கள் சட்டவிரோதமாக வெளியேறினர்


தற்போது ஐநூறு ஆசிரியர்கள் சட்ட அங்கீகாரம் இன்றி வெளிநாடு சென்றுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகள் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வழங்கப்பட்ட சலுகையின் கீழ் விண்ணப்பித்தும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள போதிலும் அனுமதி கிடைக்காத நிலையில் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மேற்படி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.


ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படாதது அநீதி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையால் அதிகமான ஆசிரியர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், இது அமைப்பிற்கு பாரதூரமான நிலைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு அதிகாரியும் இலங்கையின் வங்கி முறையின் ஊடாக தனது பெயரில் முறையாகத் திறக்கப்பட்டுள்ள ஒரு வதிவிடமற்ற வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு மாதாந்தம் பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.