ரஷ்யாவின் பன்றி பண்ணைகளில், அடிமைகளாக 500 இலங்கையர்கள்..?
இந்தியர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்குண்ட இலங்கையர்களே இவ்வாறு அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பெரு நகர பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக இந்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் ஊடாக அண்மையில் ரஷ்யா நோக்கி பயணித்திருந்தனர்.
இருப்பினும், இவ்வாறு சென்ற இலங்கையர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவை போன்று தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் பன்றி பண்ணைகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாத நிலையில் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, சுமார் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் சிறிய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் கடவுச்சீட்டுக்களை தொழில் வழங்கும் நபர்கள் தம்வசம் வைத்துக்கொண்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Twin
ரஷ்யாவில் ஒரு போதும் சௌிநாட்டவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட வரலாறு இல்லை. வௌிநாட்டவர்கள் முதலீடு செய்து அவர்களுடைய தொழிலை ஆரம்பிக்கலாம். அவர்களுடைய தொழிலை அல்லது கம்பனியை நடாத்த குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் வௌிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தலாம். இது எதுவும் தெரியாது வௌிநாட்டுப் பணியகம் இவர்களை அனுப்பியிருந்தால் அது பற்றி இலங்கைத் தொழிலாளர்களும், SLBFE யும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ReplyDelete