4 மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்துவிட்டு பாலியல் துஷ்பிரயோகம்
14, 15 மற்றும் 16 வயதுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அதிபர் அளுத்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு பாடசாலை மாணவர்களும் சந்தேக நபர்களும் சில காலமாக பேஸ்புக் மற்றும் டிக்டொக் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
இந்த மாணவர்கள் பல சந்தர்ப்பங்கள் அளுத்கம கங்கபட வீதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்கு அதிகளவில் மதுபானம் கொடுத்து மயக்கமடைந்தவுடன் 4 மாணவர்களையும் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த மாணவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்தி மாணவர்களிடம் கேட்ட போது இது தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியவந்துள்ளது.
அதன்படி, அளுத்கம பிரதேசத்தில் வைத்து 45 மற்றும் 39 வயதுடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கையடக்க தொலைபேசிகளையும் சோதனையிட்ட போது குறித்த காணொளி காட்சிகளில் இந்த மாணவர்களும் இருந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
நான்கு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். இதன்போது எல்லாவற்றையும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சில தினங்களில் இந்த மாணவர்கள் பாடசாலையில் வகுப்புகளை தவிர்த்து விட்டு சந்தேக நபர்களுடன் சுற்றித்திரிவதும் தெரியவந்துள்ளது.
இவர்களில் மூன்று மாணவர்கள் அளுத்கம பொலிஸ் எல்லைக்குட்பட்டவர்கள் இன்னொருவர் பெந்தோட்டை பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்.
பொலிஸ் காவலில் உள்ள நான்கு மாணவர்களும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment