தாய்லாந்து - இலங்கை வாரத்திற்கு 4 விமானங்கள் சேவை - குறைந்த கட்டணம்
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான குறைந்த கட்டண நேரடி விமான சேவை நேற்று -09- முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எயார் ஏசியாவின் AIQ-140 விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு 10.10 மணியளவில் வந்தடைந்துள்ளது.
அந்த விமானத்தில் 134 பயணிகள் மற்றும் 07 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
மேலும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகளுடன் தாய்லாந்து திரும்பியது.
அதற்கமைய, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் சேவையில் ஈடுபடுவதுடன், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தையும் பயணிகளையும் வரவேற்கும் வைபவம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Post a Comment