429 மில்லியன் டொலர் செலவில், கொழும்பில் அதிவேக நெடுஞ்சாலை (பிரத்தியேக படங்கள்)
குறித்த நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் இன்று -09- கண்காணித்தார்.
நிர்மாணப் பணிகளுக்கு 360 மில்லியன் டொலர் நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் 60 மில்லியன் டொலரை இந்தப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ளது. நிர்மாணப் பணியில் 70 வீதமானவை தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பில் நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை கொழும்பு பெரும்பாக அதிவேக நெடுஞ்சாலை சுற்றுவட்டத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரை 5.37 ஏழு கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் நான்கு மருங்கு வீதிகள் அமையப்பெறவுள்ளன. இதன் நிர்மாணப் பணிகளில் 70 வீதம் தற்சமயம் பூர்த்தியடைந்துள்ளன. இதன் நிர்மாணப்பணிகளை சைனா பொறியியல் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
கொவிட் தொற்றுக் காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்தமையினால் இதன் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இருப்பினும் தற்சமயம் இது மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கென விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment