இதுவரை 4000 முஸ்லிம் பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்
- திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது -
ஆகஸ்ட் 15 நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தச் சூழலில் நாம் வீடுதோறும் தேசியக் கொடி பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை -30- பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல பகுதிகளில் அவதியடைந்தனர். மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடர்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரும் கூட்டு முயற்சியின் ஆற்றலை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர். வெள்ளத்தின் போது நிவாரண பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த உலகளாவிய நலனுக்கான உணர்வே இந்தியாவின் அடையாளம் மற்றும் இந்தியாவின் பலம்.
"மக்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியா 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி வழங்கிய தொன்மையான பொருட்கள் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவை அனைத்தும் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டவை. 250 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரை பழமையானது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்ததாகும்".
இந்தியாவின் பருவமழை பாதிப்புகள் தொடர்பாக பேசிய பிரதமர், "கடந்த சில் நாட்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கைப் பேரிடர்களால் பாதிப்பு ஏற்பட்டது. யமுனை உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்காலங்களில் மக்கள் நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஹஜ் கொள்கையில் சவுதி அரேபிய அரசு மாற்றம் செய்திருக்கின்றது. இதுவரை 4000 முஸ்லிம் பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாம் அனைவரும் விழாவை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். சுமார் 2 லட்சம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர தின விழாவுக்கு மத்தியில் நாட்டில் மற்றொரு பெரிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. நமது துணிச்சலான தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பிரசாரம் தொடங்கப்படும்.
வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும் நாடு முழுவதும் 'என் மண் என் நாடு' என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆளுமைகளின் நினைவாக லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும். இந்த பிரசாரத்தின் போது அம்ரித கலச யாத்திரை நடத்தப்படும். நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 7,500 கலசங்களில் மண் சுமந்து செல்லும் இந்த கலச யாத்திரை தலைநகர் டெல்லியை சென்றடையும். இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரக் கன்றுகளும் கொண்டு வரப்படும். தேசிய போர் நினைவிடம் அருகே 7,500 கலசங்களில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை வைத்து 'அமிர்த வாடிகர்' கட்டப்படும். இது நாட்டின் மாபெரும் அடையாளமாக மாறும். கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும். இதன் மூலம் நமது கடமைகளை உணர்வோம். நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த எண்ணற்ற தியாகங்களை உணர்வோம். சுதந்திரத்தின் மதிப்பை உணர்வோம். இந்த முயற்சிகளில் ஒவ்வொரு மக்களும் இணைய வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் அனைவரும் அங்கம் வகிப்போம். சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாம் எப்போதும் நினைவு கூற வேண்டும். அவர்களின் கனவுகளை நனவாக்க இரவு-பகலாக உழைக்க வேண்டும். மக்களின் இந்த கடின உழைப்பையும், கூட்டு முயற்சியையும் முன்னுக்கு கொண்டு வருவதற்கான ஒரு இணைப்பு பாலமே இந்த மான் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ஆகஸ்ட் 15 நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தச் சூழலில் நாம் வீடுதோறும் தேசியக் கொடி பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்".
சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment