Header Ads



4 மாதக் குழந்தையை 10 வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பியோடிய நபர்

 


ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக் குழந்தையை. பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாட்டிற்கமைய,உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலையத் தளபதி எல்.டி.லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் (11.07.2023) வீட்டிற்கு சென்று குழந்தையை பொலிஸாரிடம் அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


பத்து வயது குழந்தையை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிரமான போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பனாவல தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கட்டளைத் தளபதி, பெண் உப பொலிஸ் பரிசோதகர் லியனகே, பொலிஸ் கான்ஸ்டபிள் 15447 ஸ்ரேயந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.