Header Ads



3 சடலங்களை அடையாளம் காண உதவுங்கள்


- கனகராசா சரவணன் -


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 3 ஆண்களுடைய சடலம் இனங்கானப்படாமல் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தருமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணமுடியது நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்


இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments

Powered by Blogger.