Header Ads



தாய்லாந்தைவிட அழகாக இருக்கும் இலங்கையின் மிதக்கும் சந்தை 312 மில்லியன் நாசமாகியது ஏன்..?


சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 312 மில்லியன் செலவில் சிறிலங்காவில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சந்தை தற்போது கவனிப்பாரற்று காணப்படுகின்றது.


இச்சந்தை கொழும்பு பெட்டாவில் உள்ள பாஸ்டியன் மாவத்தையில் ( Bastian Mawatha)அமைந்துள்ளது.


இங்கு 92 வர்த்தக கடைகள் இருப்பதுடன், பல ஸ்டால்கள் பெய்ரா ஏரியில் படகுகளில் நிறுவப்பட்டுள்ளது.


இங்கு அமைக்கப்பட்ட பெரும்பாலான கடைகள் உபயோகப்படுத்தாமல் இருப்பதோடு, சற்று விலை அதிகமாகவே இருப்பதால் பொதுமக்கள் எந்த பொருட்களையும் அவ்வளவாக வாங்குவதில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.


அப்போதைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி கொழும்பில் மிதக்கும் சந்தை திறந்து வைக்கப்பட்டது.


தாய்லாந்து மிதக்கும் சந்தையை விட அழகாக இருக்கும் இந்தச் சந்தையில் நல்ல உணவகம் கூட இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


அத்துடன் 312 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டாலும் சரியான பராமறிப்பின்றி பாழடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  


இந்த மிதக்கும் சந்தையை அவதானிக்கும் மக்கள் 312 மில்லியன் வீணாகிவிட்டதா? என்ற கேள்வி இதனை பார்ப்பவரது மனதிற்குள் எழுந்து வருகின்றது.

No comments

Powered by Blogger.