Header Ads



ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும், நடக்காத தேர்தலுக்காக 3 பில்லியன் ரூபாவை செலவழித்த JVP


- Ismathul Rahuman -


சுகாதாரத் துறையின் மூலம் அரசை வீழ்த்தலாம் என எதிர் கட்சியினர் எத்தனிக்கின்றனர். இதற்கு மக்கள் ஏமாறவேண்டாம் என ஜனாதிபதியின் தொழிற்சங்கம் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய நீர்கொழும்பு தொகுதி ஐதேக மத்தியகுழுக் கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.


   ஐ.தே.க. நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஜிஹான் பென்ஜமின் பிரனாந்து தலைமையில் நீர்கொழும்பு, முன்னக்கர அலியபொல வரவேற்பு மண்டப வளவில் இடம்பெற்ற இல் கூட்டத்தில் ரத்னப்பிரிய தொடர்ந்து உரையாற்றுகையில்  2024 ம் வருடம் தேர்தல் வருடமாகும். ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும். ரணில் தனி மந்திரியாக இருந்து நாட்டை பொறுப்பேற்றார். மக்கள் ஆணை உள்ளதா என கேள்வி கேட்கின்றனர். பாராளுமன்ற ஆணைமூலமே ஜானாதிபதியானார். அதற்கு வேறு ஆணை தேவையில்லை.


    அஸ்வெசும, கடன்மறுசீரமைப்பு தொடர்பாகவும் எதிர் கட்சியினர் பேசுகின்றனர். அதுவும் அவர்களுக்கு எடுபடவில்லை. அஸ்வெசுமவுக்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம். சில குறைபாடுகள் ஏற்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்கிறோம்.  கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க சந்தர்பம் வழங்கவுள்ளோம்.


  21 வயது யுவதி பேராதனை வைத்தியசாலையில் மரணமடைந்தற்காக கட்சி என்ற முறையில் எமது கவலையை தெரிவிக்கிறோம். என்டிபயோட்டிக் மருந்தூசியே ஏற்றுப்பட்டுள்ளது. ஒவ்வாமையினாலேயே மரணம சம்பவித்துள்ளது. CRP இரத்தப் பரிசோதனையில் 272 எனக்கு காட்டப்பட்டுள்ளது. சாதாரணமாக 6 இருக்கவேண்டும்.  இவ்வாறு உலகில் ஒரு இலட்சத்திற்கு ஓரிரண்டு மரணங்கள் சம்பவிக்கின்றன.


   கோவிட் காலத்தை எடுத்துக்கொண்டால்  இலங்கையை விட அமெரிக்காவில் மரண வீதம் அதிகமாகவிருந்தன.


   தரக்குறைவான மருந்துகள் கொண்டுவந்ததாக குற்றச்சாட்டுகின்றனர். எந்த நாட்டிலிருந்தும் மருந்துகளை கொள்வணவு செய்வதாயிருந்தாலும் அந்த நாடுகளில் பயன்படுத்தும் மருந்துகளையே தருவிக்கின்றோம். அதனை மீண்டும் பரிசோதிக்கத்தேவையில்லை. சுகாதார துறை மூலம்  அரசை வீழ்த்த எதிர்கட்சிகள் எத்தனிக்கின்றனர். அதற்கு மக்கள் ஏமாறவேண்டாம்.


    ஜே.வி.பி. நடக்காத தேர்தலுக்கா  3 பில்லியன் ரூபாவை செலவழித்துள்ளது. ஏழைகளுக்கு உதவமாட்டார்கள். அநுர குமார் ஒரு நாளைக்கு மூன்று கூட்டங்களை நடத்தும் போது மூன்று வகை உடுப்புக்களை அனிகிரார். கேட்டால் ஒவ்வொரவரும் தருவதாக கூறுவார்.

    ஐதேக தலைவரால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்பதை ரணில் நிறுபித்துள்ளார் என தெரிவித்தார். 

     

No comments

Powered by Blogger.