மரம் விழுந்து 2 பேர் மரணம், மூவர் படுகாயம்
விசாலமாக மரமொன்று முறிந்து விழுந்ததில், இருவர் பலியானதுடன் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்குரஸ்ஸ அமராகொட சந்தியில் உள்ள வாகனம் திருத்தும் இடத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வாகனங்களைத் திருத்திக்கொள்வதற்கான வந்திருந்தவர்களே இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பிரதேசத்தில் வீசிய காற்றின் காரணமாகவே இந்த மரணம் முறிந்து விழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment