இலங்கைச் சிறுவர்களை அச்சுறுத்தும் 2 பிரதான நோய்கள்
இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 900 சிறுவர்கள் புற்றுநோய்ப் பாதிப்பால் இனங்காணப்படுவதாகவும் அதேவேளை 100 சிறுவர்கள் நீரிழிவு நோயுடன் இனங்காணப்படுவதாகவும் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
"ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்திராத இந்த நிலைமைக்கு பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன" என்று வைத்தியர் பெரேரா கூறினார்.
எமது சிறுவர்களைப் பாதுகாக்க சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களைக் கையாளல், துரித உணவுகளைத் தவிர்த்தல் மற்றும் உடல் செயற்பாடுகளை அதிகரித்தல் போன்றவற்றை பின்பற்றுதல் அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment