விகாரையில் 2 பெண்களுடன் இருந்த தேரர், பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு (படங்கள்)
குறித்த மூவரும் விகாரைக்குள் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில் பிரதேச மக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்னர்.
நாட்டில் அண்மைக்காலமாக சில பௌத்த துறவிகளின் பாலியல் ரீதியாக எழும் சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட தேரர் முஸ்லிம் பெண்களின் சமய மற்றும் கலாசார ரீதியான ஆடைகளை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல இனவாத செயற்பாடுகளில் முன்னணி வகித்தவர். இவர் இப்போது மாட்டிக் கொண்டுள்ளதால் எம்மவர்கள் தான் மிகவும் குஷியாக இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது தவறானதோர் மனநிலை. இந்த நிலைமை அவருக்கு இறைவன் கொடுத்த தண்டனை என எடுத்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருப்பதே காலத்துக்கு ஏற்ற செயலாகும் .
Post a Comment