Header Ads



2 விடயங்களுக்காகவே ரணிலை ஜனாதிபதியாக்கினோம், ஏனையவற்றுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அல்ல


பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவே  ரணிலை ஜனாதிபதியாக்கியதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படையிலேயே போராட்டங்களுக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். 


இது தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு பொஜன பெரமுன ஆதரவு தெரிவிப்பதாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தம்பதெனிய தொகுதிக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தெரிவித்தார். 


1 comment:

  1. கள்வர்களைப் பிடிக்க மிகப் பெரிய கள்ளனை நியமித்ததும் அவருக்கு புதுமையான ஒரு உணர்வு வந்திருக்கின்றது. பொதுவாக கள்வர்களுக்கு வரும் உணர்வுதான் .அது. உலகில் இலங்கை ஒரு புதுமையான நாடு என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.

    ReplyDelete

Powered by Blogger.