Header Ads



சபாநாயகர் யாப்பாவுக்கு எதிராக, வெளிநாட்டுக்கு சென்ற 2 கடிதங்கள்


சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் என்பவற்றுக்கு எதிர்க்கட்சியினால் கடிதம் அனுப்பி வைப்பு.


பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலையே குறித்த கையொப்பமிடும் நிகழ்வு நேற்றைய தினம் இடம் பெற்றது.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.