தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்க முடியாத 2 சிறுமிகள் ஆசிரியையிடம் முறைப்பாடு
கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த அநியாயத்தை யாரிடம் முறையிடுவது, இந்த பிள்ளைகளின் நிலைமை என்ன, அவர்களை அரசால் நடாத்தப்படும் நிலையஙகளில் நிறுத்தினால் அவர்களின் கல்வி, ஏனைய தேவைகள் சரியாக கவனிக்கப்படுமா? இந்த சைத்தானை சிறையில் தள்ளினால் அந்தப்பிள்ளைக்கு தாயுமில்லை,தந்தையுமில்லை. என்ன அநியாயம் இது. இந்த சைத்தானுக்கு குறைந்தளவு பிள்ளைகளைப் பாதுகாப்பது அவனுடைய கடமை என்ற உணர்வு கூட இல்லாமல் அரக்கனாக நடந்து கொள்கின்றானே.
ReplyDelete