சென்னை விமான நிலையத்தில், இலங்கையர்கள் 2 பேர் உயிரிழப்பு
இருவேறு சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் மாரடைப்பு காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் சென்றிருந்த அவர், மீளவும் யாழ்ப்பாணம் திரும்புவதற்கான விமான நிலையம் வந்திருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
விமான நிலைய வைத்தியர்கள் அவரை சோதனை செய்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் இருந்து சென்னை வந்த ஒருவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்து சுங்கப் பிரிவுக்கு நடந்துச் சென்ற போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்புகள் குறித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment