மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர ஆகிய பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உறவினர்களான இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment