2 தங்கக் கண்களை கழற்றிய, முன்னைய புலி உறுப்பினர் கைது
தெய்வ சிலையில் இருந்து கண்களை இரண்டையும் கழற்றியவருக்கு அதனை மறைத்து வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடப்பு காளி கோவிலில் காளி சிலையில் இருந்த தங்கத்திலான கண்கள் இரண்டையும், அந்த சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் திருடிக்கொண்டுச் சென்றிருந்த கும்ப்வூ கைது செய்யப்பட்டுள்ளார் என்று உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் நாட்டில் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பின் உறுப்பினராக இந்த சந்தேகநபர் நெருக்கி செயற்பட்டுள்ளார்.
புலிகளின் நிர்வாக பிரதேசத்துக்குச் சென்று கும்ப்வூ கலையை பயின்றவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர், தேங்காய் பிடுங்கும் தொழில் செய்பவர் என்றும், அந்த கோவில் திருவிழாவின் போது, வேல் குத்தி, பறவைக்காவடி ஆடுபவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment