கொழும்பில் விபத்து, உறவினர்கள் 2 பேர் மரணம்
கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - கொலன்னாவை பிரதான வீதியில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உறவினர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 26 வயதுடைய அன்ரனி மரியநாயகம், அவரது மைத்துனரான 22 வயதுடைய தேவதாஸ் கனிஸ்ரன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment