Header Ads



அறை ஒன்றில் 2 சடலங்கள் மீட்பு


கொழும்பு புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆண் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அந்த அறையில் அவருடன் தங்கியிருந்த பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


களுபோவில வைத்தியசாலை வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஹம்சர் குமார் என்ற 26 வயதான இளைஞன் மற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலசுப்ரமணியம் யோகேஸ்வரி என்ற 37 வயதான பெண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.