Header Ads



மன்னம்பிட்டி விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு


பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.


பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.


பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு

இந்த நிலையில் இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.