Header Ads



29.57 செக்கனில் 50 இலங்கை மாணவர்கள் படைத்த உலக சாதனை


இலங்கையில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் (01-07-2023) புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.


புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு  நிறைவினை முன்னிட்டு “பிளாஸ்டிக்கை கடந்து செல்வோம்” (Pass on plastic ) எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று பாடசாலை அதிபர் ஆர்.யே.பிரபாகரன் தலைமையில் புனித மைக்கேல் சாரண படையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.


29.57 செக்கனில் 50 சாரண மாணவர்களினால் 2124 பிளாஸ்ரிக் வெற்று பொத்தல்களினால் 150 இலக்கத்தை அமைத்து கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளனர்.


இந் நிகழ்வின் கின்னஸ் சாதனைக்கான பரிந்துரை நடுவர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் வாகரை பிரதேச செயலக கணக்காளர் திருமதி.சந்திரகலா ஜேயேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டு தமது கடமையினை மேற்கொண்டிருந்தனர்.


மேலும் சோழன் புத்தக உலக சாதனை நிறுவனத்தினால் (Cholan book of world record) சான்றிதழ்கள் இதன் போது மைக்கேல் கல்லூரியின் சாரண மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வின் போது 2022 - 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி விருது பெற்ற பாடசாலை சாரண மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் பாக்கு நீரினை நிந்தி கடந்த தவேந்திரன் மதுசிகனுக்கு வெற்றி கேடயம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.