களனி பாலத்திற்கு பெரும் ஆபத்து 28 கோடி ரூபா நாசம் - உயர் பாதுகாப்பு வலயமாக்க திட்டம்
குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைக்கு அடிமையானவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இரவு நேரங்களில் ரகசியமாக இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில், தற்போது 286 மில்லியன் ரூபாய் (28 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்களை கூட அறுத்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் ஒளிரச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலைமையின் அடிப்படையில் புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியின் பாதுகாப்பை ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா - கொழும்பு நெடுஞ்சாலையில் மின்சார கேபிள்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு வலைகள் கூட வெட்டி இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. TM
Post a Comment