Header Ads



வீதியை விட்டு விலகிய பஸ் - 26 பேர் காயம்


தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர  வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26  பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பி​ரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.